பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘ஆசோங்’ என்பவரிடம் ரிம30,000 பெறுமதியுள்ள 1மலேசிய புத்தக பற்றுச் சீட்டுகளைக் கொடுத்து ஏமாந்தார்.
ஏப்ரல் 2-இல் அச்சம்பவம் நிகழ்ந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் அந்த 22-வயது மாணவர் போலீசில் புகார் செய்ததாக ஷா ஆலம் போலீஸ் தலைவர் ஏசிபி ஷாபியன் மாமாட் கூறினார்.
“அம்மாணவர் தன் நண்பர்களுக்கும் ஆசோங் என்பாருக்குமிடையில் பற்றுச்சீட்டுகளை ரொக்கமாக மாற்றுவதற்கு ஓர் இடைத்தரகர்போல் செயல்பட்டிருக்கிறார்”, என்று அவர் இன்று ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தில் தெரிவித்தார்.
பற்றுச்சீட்டுகளைக் கொடுத்து பணம் வாங்கும் நேரத்தில் இரண்டு “போலீஸ்காரர்கள்” தோன்றி நூல்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய பற்றுச் சீட்டுகளைப் பணத்துக்கு விற்க முயன்றதற்காக மாணவனைக் கைது செய்யப்போவதாக மிரட்டினர்.
“ஆசோங் ஓடி விட்டார். இரண்டு போலி போலீஸ்காரர்களும் பற்றுச் சீட்டுகளைக் கைப்பற்றினார்கள்”, என்று கூறியவர் மூவருமே ஒரு திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்றார்.
இதன் தொடர்பில் போலீசார் இதுவரை எழுவரைத் தடுத்து வைத்துள்ளனர். ஆனால், ஆசோங் இன்னும் சிக்கவில்லை.
-பெர்னாமா
பற்று சீட்டை விற்க முயன்ற மாணவனும் தண்டனிக் குரியவர் தான்.