மாநில தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில், ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமல் சரவாக் மாநில அரசாங்கம் எதிரணித் தலைவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து வருகிறது.
இன்று காலையில், சிலாங்கூர் மாநில சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
“சிபு விமானதளத்தில் இறங்கி விட்டேன். சரவாக்கினுள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளேன். தேவாலயம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் இங்கே இருக்கிறேன்”, என்று இயோ இன்று காலையில் டிவிட் செய்திருக்கிறார்.
ரிம1,013 கொடுத்து கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு திரும்பி வரும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இயோ, இங்கு எவராலும் எனக்கு விளக்கமளிக்க முடியவில்லை என்றார்.
இதுதான் மலேசியாவின் ஜனநாயகம்.
முதலமைச்சரே!சரவாக்கில் தேர்தல் எதற்கு? வெளி ஆட்கள் யாரையும் அனுமதிக்காமல் உங்களுக்குள்ளாலே தேர்தலை நடத்தினாலும் சரி நடத்தாவிட்டாலும் சரி..யாரும் உங்களை கேள்வியே கேட்கமுடியாது!ஏனென்றால்..இறுதியில் வெற்றி பெற போவது என்னவோ நீங்கள்தான்..அப்படியே மலேசியாவிலிருந்து விலகிவிடுங்கள் மலேசிய எதிர்கட்சியினரை நினைத்து பயப்பட தேவையேயில்லை!!
மலேசியாவில் ஜனநாயகமா? புதுசா இருக்கே ?