இன்று புத்ராஜெய, மஸ்ஜித் புத்ராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் நஜிப் செய்துள்ள டிவிட்டில் சொர்க்கத்திற்கு குறுக்குவழி கிடையாது என்று கூறுகிறார்.
அந்த டிவிட்டில், “நான் மஸ்ஜித் புத்ராவில் இருந்தேன். சமய போதனை சொர்க்கத்திற்கு குறுக்குவழி இல்லை என்பது பற்றியதாகும்.
“நாம் அதனை நோக்கி உழைக்க வேண்டும் (சொர்க்கத்தில் ஓர் இடத்தைப் பிடிப்பது) என்பதோடு இஸ்லாமிய கோட்பாட்டை அன்றாட வாழ்க்கையில் வலுப்படுத்த வேண்டும்”, என்று நஜிப் கூறுகிறார்.
ஜாக்கிம், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா, தயாரித்திருந்த அந்த சமய போதனை ஜிகாட் பற்றிய தீவிர புரிந்துணர்வு பற்றி குறிப்பிட்டிருந்தது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்று அது கூறிற்று.
அந்தக் குறிப்பில், சொர்க்கத்திற்கான வழி அல்லாவின் மீது நம்பிக்கை வைப்பதும் முகமது நபி அவர்கள் போதித்த நற்செயல்களை செயற்படுத்துவதுமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, குறுக்குவழிகள் இல்லை என்று டிவிட்டில் கூறப்பட்டுள்ளது.
சொர்கத்திலே, முடிவானது RM2.6 பில்லியன்!
ஐ யோ, கடவுள. உனக்கும் இந்த நம்பிக்கை. கிடைக்குமா?
இதோ பருடா யாரு சொல்லுரா என்று . சொர்க்கத்திற்கு குறுக்குவழி கிடையாது என்று கூறுகிறார் இவன்னுக்கு நரகமே.
இவன் இப்படி சொல்கிறான் -ஆனால் இவன் மதத்தில் சேர்ந்தால் உடனே சொர்கத்திற்கு செல்லலாம் என்றுதானே பறை சாற்றுகிரான்கள்- இக்காலத்திலும் இப்படி மடத்தனமாக பேசும் தலை–பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுக்கலாமே?
கோட்பாடு =2.6 பில்லியன்.
உண்மைதான் ! சொர்க்கத்தில் உண்மையானவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் மட்டும் தான் இடம்.
சொர்கத்தை பற்றி பேச அருகதை அற்றவன் பேசுகிறான் உனக்கு அழிவு நெருங்கிவிட்டதுடா
தற்பொழுது நஜீப் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சொர்க்க வாழ்க்கை யைவிட வேறு ஒரு சொர்க்கம் எங்கே இருக்கிறது? இதுவரை சொர்க்கத்தைக் கண்டவர் எவரேனும் இருந்தால் விளக்கம் கூறுங்கள். நம்பிக்கை நாயகன் தலைமயில் இயங்கும் அம்னோ தலைவர்களும், அவருடைய ஆதரவாளர்களும் சொர்க்கத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறுக்கு வழி உங்களுக்கு தெரிந்த வழி.