சரவாக் முதலமைச்சர் அடுனான் சதேம் மே 7 மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளர்களைப் பிடிக்கவில்லை என்றாலும் தமக்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நேற்று வெட்டுமர நிறுவனமொன்றில் நடந்த கூட்டத்தில் பேசிய சரவாக் பிஎன் தலைவர் தாம் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பதையே சரவாக் மக்கள் விரும்புவதாகக் கூறினார்.
மெர்டேகா மையத்தின் அண்மைய கருத்துக்கணிப்பு அவருக்கு 81 விழுக்காடு மக்களின் ஆதரவு இருப்பதைக் காண்பித்ததை அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு கூறினார்.
“பிஎன் வேட்பாளர்களைப் பிடிக்கவில்லை என்றால் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்”, என அடுனான் கூறியதாக போர்னியோ போஸ்ட் தெரிவித்தது.
தம்மால் மட்டும் தனித்து நின்று தேர்தலை வென்றுவிட முடியாது என்றாரவர்.
“தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் தோற்றால் என்னால் முதல்வர் ஆக முடியாது. நாங்கள் ஒரு குழு. என்னால் மட்டும் தனித்து வெற்றி பெற முடியாது”, என்றாரவர்.
அடுனான் சாத்தேம்! சரவாக்கில் பி.என்.நுழையக்கூடாது என்று ஆவேசப்பட்ட நீங்கள்,பாரிசான் நேஷனலின் வாக்காளர்களை பிடிக்கவில்லை என்றால் எனக்காக வாக்களியுங்கள் என்று கேட்டுகொண்டிருக்கிரீர்கள்!பதிவிக்காக பச்சூந்திபோல் அடிக்கடி நிறத்தை மாற்றி கொள்கிறீர்கள்…பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த சரவாக் மக்கள்.முதலமைச்சரை நம்பி நடு கடலில் மூழ்கபோகிரீர்கள் என்பது நிச்சயம்!சிந்தித்து செயல்பட்டால் நன்று.
எதுக்கு, பி.என்னுக்கு ஓட்டுப் போட நினைக்கும் ஓரிரண்டு பேரும் கூட ஓடிப்போறதுக்கா ? அதுவும் நல்லதுக்குத்தான், அப்படியே ஆகட்டும்
சரவாக் கிறிஸ்து மக்கள் சரவாக்கை ஆளப் பிறந்தவர்கள்.நழுவ விட வேண்டாம்.
ஐயா nageswaran அவர்களே– அதெல்லாம் நடக்காது– காரணம் bumi putra என்ற போர்வையில் அங்குள்ள மக்களை தங்களின் கையில் வைத்துள்ளான்கள்– மற்றும் எவ்வளவோ பேரை மத மாற்றமும் செய்தாகி விட்டது. வரும் காலத்தில் இங்குள்ளது போல் அங்கும் வரலாம். காரணம் பேராசை பலரின் கண்ணை மூடி விட்டது. அதிலும் சீனனின் பண பலம் அங்கு ஆட்சியின் பக்கம்-எல்லாம் பொருளாதார ஒப்பந்தத்திற்கு. என்று இந்த நாட்டில் நாம் எல்லோரும் மலேசியர்கள் என்ற வருகிறதோ-ஊட்டப்படுகின்றதோ அன்றுதான் விடிவு. அது ஞாயிறு மேற்கில் உதித்தால்தான்.