இரண்டு தவணைகள் செனட் தலைவராக இருந்து பணிஓய்வு பெறும் அபு ஸகார் ஊஜாங் பணிஓய்வு பெற்றாலும் தொடர்ந்து நாட்டுக்கும் இனத்துக்கும் சேவை செய்யப்போவதாகக் கூறினார்.
அவரது பணிஓய்வைக் குறிக்கும் வகையில் நேற்றிரவு ஒரு நிகழ்வு நடைபெற்றது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதில் விருந்தினராகக் கலந்து கொண்டார்.
“நான் உயிரோடு இருக்கும் வரையில் நாட்டுக்கும் இனத்துக்கும் என்னால் முடிந்தவரை சேவையாற்றுவேன் என்பதைப் பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என் வாக்குறுதி”, என்று அபு ஸகார் கூறினார்.
இதுவரையில் மக்கள் பணத்தில் சீட்டை சூடேற்றியது போதும். இனியும் மக்கள் பணத்தைச் சுரண்ட வழி தேட வேண்டாம்.
உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள், “துன் பட்டம் வேண்டாம், நல்ல ஆதாயம் தரும் பதவி தாருங்கள்” என தூதர் பதவியை கேட்டு வாங்கிக்கொண்ட எங்கள் முன்னால் ம்.இ.கா தலைவர்தானே உங்கள் குரு, அவரைப்போலவே பணி ஓய்வுக்குப் பிறகும் பதவி தேடிறீர்களாக்கும், மொத்தத்தில் கண்ணை மூடும்வரை ஏதாவது பதவியில் ஒட்டிக்கொள்ளவேண்டும் ? நல்ல ஆசை, நிறைவேறட்டும்
நாட்டுக்கு சேவை செய்வேன் என்று சொல்வதெல்லாம் சும்மா பேச்சுக்குதான் என்று இந்த நாடே அறிந்ததுதான்!உங்கள் இனத்துக்கு சேவை செய்வீர்கள் என்பதுதான் மறுக்கபடாத உண்மை.. உங்களை போன்றவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன!பூமிக்காவது சற்று பாரமாவது குறையும்.
பயன் கருதாது செய்வதுதான் சேவை. அரசியலில் பணியாற்றும் அல்லது பணியாற்றி ஓய்வு பெற்றவர் எவரேனும் இந்த “சேவை” என்ற வார்த்தையை பயன் படுத்த தகுதியுள்ளவர்களா?
நாட்டுக்கு சேவை என்றால் அடுத்த தேர்தலில் அம்னோ வேட்பாளராக போட்டியிடுங்களேன்.