1எம்டிபி- ஐபிஐசி-இன் யுஎஸ்$50 மில்லியன் தகராற்றில் சம்பந்தப்படுத்திக் கொள்ள நிதி அமைச்சு விரும்பவில்லை

mof1எம்டிபி  மேம்பாட்டு  நிறுவனத்துக்கும்  இண்டர்நேசனல்  பெட்ரோலியம்  இன்வெஸ்ட்மெண்ட்   நிறுவன(ஐபிஐசி) த்துக்குமிடையில்   1எம்டிபி  வெளியிட்ட  கடன்  பத்திரங்களுக்கு  கொடுக்க  வேண்டிய  யுஎஸ்$50 மில்லியன்   வட்டி மீது  மூண்டுள்ள  சர்ச்சையிலிருந்து  நிதி  அமைச்சு (எம்ஓஎப்)  விலகி  இருக்கவே  விரும்புகிறது.

இது  இரு  நிறுவனங்களின்  தொழில்  தகராறு  என  நிதி  துணை  அமைச்சர்  ஜொஹாரி  அப்துல்  கனி  கூறினார்.

“அரசாங்கம்  அதில்  தலையிடாது.  ஆனால்,  கவனிக்கும். இந்த  நிலையில்  நாங்கள்  தலையிட  மாட்டோம்.

“1எம்டிபியும்  ஐபிஐசியும்  விவகாரத்தை  அவையே  தீர்த்துக்கொள்ள   விட்டு  விடுவோம்”, என்று  ஜோஹாரி  இன்று  கம்போங்  பாருவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.