பிகேஆரைச் சமாதானப்படுத்த டிஏபி பத்து கித்தாங்கை விட்டுகொடுத்தது

batuசரவாக்  தேர்தலில் தொகுதிப்  பங்கீடு  தொடர்பில்  மூண்ட  புகைச்சலை  முடிவுக்குக்  கொண்டுவர   புக்கிட்  கித்தாங்  தொகுதியை  பிகேஆருக்கு  விட்டுக்  கொடுப்பதாக  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

டிஏபி  வசமிருந்த  பத்து  காவா,  கோத்தா  செந்தோசா  ஆகிய  தொகுதிகளிலிருந்து  உருவாக்கப்பட்டிருக்கும்  ஒரு  புதிய  தொகுதிதான்  பத்து  கித்தாங்.  சரவாக்  டிஏபி  தலைவர்  சோங்  சியாங்  ஜென்னை  அங்குக்  களமிறக்கத்  திட்டமிடப்பட்டிருந்ததாக  லிம்  தெரிவித்தார்.

அந்தத்  தொகுதியில்  இப்போது  பிகேஆரின்  வூன்  ஷியாக்  நி  போட்டியிடுவார்.

“பிகேஆர்  துணைத்  தலைவரும்  சிலாங்கூர்  மந்திரி  புசாருமான  டத்தோ  ஸ்ரீ  அஸ்மின்  அலி  அறிவித்த  பெண்  வேட்பாளரான  வூன்  ஷியாக்  நி-க்கு  டிஏபி  முழு  ஒத்துழைப்பு  கொடுக்கும்”,  என்று  லிம் குறிப்பிட்டார்..

டிஏபியும்  பிகேஆரும்  ஒத்துழைத்தும்  ஒன்றுக்கொன்று  உதவிக்  கொண்டும்  பரஸ்பம்  வெற்றி  பெற்று  அந்த  வெற்றியின்  மூலமாக  மாநிலச்  சட்டமன்றத்தில்  பிஎன்னுக்கு  மூன்றில்  இரண்டு  பங்கு  பெரும்பான்மை  கிடைப்பதைத்  தடுக்கும்  முயற்சியிலும்  வெற்றிபெற  வேண்டும்  என்பதுதான்  டிஏபி-இன் விருப்பமாகும்  என  பினாங்கு  முதலமைச்சருமான  லிம்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.