பினாங்கு டிஏபி துணைத் தலைவர் சரவாக்கில் நுழைய தடை

imigசரவாக்  அரசு,  எதிரணி  அரசியல்வாதிகள்,  குறிப்பாக  பிகேஆர்,  டிஏபி  கட்சிகளைச்  சேர்ந்தவர்கள் சரவாக்கினுள்  நுழைவதைத்  தடுக்கும்  கொள்கையை  விடாமல்  கடைப்பிடித்து  வருகிறது.

இன்று  காலை  பினாங்கு  டிஏபி  துணைத்  தலைவர்  ஜக்தீப்  சிங்  டியோ  கூச்சிங்  விமான  நிலையத்தில்  தடுத்து  நிறுத்தப்பட்டார்.

“இன்று  காலை  மணி  9க்குக்  குடிநுழைவுத்  துறை  நான்  சரவாக்,  கூச்சிங்கில்  அடியெடுத்து  வைப்பதைத்  தடுத்து  நிறுத்தியது  மிகவும்  ஏமாற்றம்  அளித்தது.

“சரவாக்  தேர்தல்  நெருங்கிவரும்  வேளையில்  எனக்கும்  எனக்குமுன்  வேறு  பலருக்கும்  அனுமதி  மறுக்கப்பட்டது  ஜனநாயகமற்ற  முறையில்  நிர்வாகம்  செயல்படுவதையும்   அதையும்  விட  முக்கியமாக   முதலமைச்சர்  அடினான்  சதேம்  தலைமையில்  செயல்படும்  சரவாக்  அரசு  அச்சம்  கொண்டிருப்பதையும்  காண்பிக்கிறது”, என்று  ஜக்தீப்   ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“சரவாக்  மலேசியாவின்  ஒரு  பகுதி.  நான்  ஒரு  மலேசியக்  குடிமகன். சட்டப்படியும்  அரசமைப்புப்படியும்  சர்வாக்  செல்லும்  உரிமை  எனக்குண்டு”, என்றாரவர்.

நேற்று,  பேராக்  டிஏபி  தலைவர்  ங்கா  கொர்  மிங்,  சிபு-விலிருந்து  திருப்பி  அனுப்பபட்டார். அப்போது  அவர்  சரவாக்  “சர்வாதிகார  மாநிலமாக”  மாறிவருகிறது  என்றார்.