நேற்று ஈப்போவில் ஒரு கோயிலில் இருந்த சிலைகளை உடைத்தவன் மூளைக் கோளாறு உள்ள ஓர் ஆடவன், அதை மக்கள் இன விவகாரமாகக் கருதக் கூடாது.
இவ்வாறு அறிவுறுத்திய ஈப்போ போலீஸ் தலைவர் ஏசிபி சும் சாங் கியோங், ஜாலான் ஹோஸ்பிடலில் அங்சானா மாலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் ஒன்பது தெய்வச் சிலைகளை அடித்து நொறுக்கிய 29-வயது ஆடவன் மருத்துவச் சோதனைக்கு அனுப்பப்படுவான் என கூறினார்.
சிலைகளை அடித்து நொறுக்கிய அவ்விளைஞன் ஜாலான் கசாலி ஜாவியில் போக்குவரத்துக்கு எதிராக தன்னுடைய காரைச் செலுத்தி பஸ் நிறுத்தம் ஒன்றில் மோதினான்.
அவனைப் போலீஸ் கைது செய்தது.
-பெர்னாமா
உடைத்தவன் இந்தியனா,மலாய்க்காரனா , சீனனா? மூளைக்கோளாறு இருந்தால் இந்து கோவில்தான் கிடைத்ததா? என்னடா கதை இது?யாருக்கு மூளை கோளாறு? செய்தவனுக்கா கதை சொல்பவனுக்கா? செய்வதெல்லாம் செய்து விட்டு மூளை கோளாறு என்று மூடத்தானே?
அப்பொழுது இவனுக்கு தவறான மத போதனையால் இன வெறி மூலை கோளாறு ஆகிவிட்டான் !!!!!!!!!!!!!!
நான் நேற்று அந்த சம்பவ இடத்தில இருந்தேன். என்ன நடந்தது என்று முற்றிலும் தெரியும். ஒரு பைத்தியக்காரன் என்றல் அவன் எப்படி ISIS கோடியை ஏந்தி வந்தான்? மகிழுந்து எப்படி ஓட்டி வந்தான்? ஏன் பைத்தியகரனுக்கு ஹிந்து கோவில் மட்டும் தான் கண்ணில் தெரியுமா?
இது வெறும் கண துடைப்பு ………… தமிழன் எழ வில்லை என்றால் இனம் மடிவது நிச்சயம்
அப்படியா ……. நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் . தலை ஆட்ட நாங்கள் தயார்
பி.என்.அரசாங்கம் மற்றும் போலிஸ் தரப்பினர் எப்பொழுதும் கூறுகின்ற கூறக்கூடிய சாக்கு போக்கு மேலே அறிவுறுத்தியது எதிபார்த்த ஒன்றுதானே நாம் ஆத்திரப்பட்டு ஆவேசப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை மூளை கோளாறுவுடைய ஒருவன் எந்தஒரு பிரச்சனையில்லாமல் காரை சுயமாக செலுத்துவானாம் நேராக இந்து ஆலயம் நோக்கி செல்வானாம் அங்கு வீற்றிருக்கும் விக்ரங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பவே போலிசாரால் கைதானபிறகு அவன் புத்தி கொலாருவுடையவன் என்பார்களாம்..காலங்காலமாக இதே பள்ளவிதானே!இந்தியர்கள் இந்தவிதமான ஈன செயலில் ஈடுபடமாற்றார்கள் இது உலகம் அறிந்ததுதான் நம் இந்திய தலைவர்கள் அறிக்கை மேல் அறிக்கைவிட்டு தங்களை அறிக்கை மன்னர்களாக பறைசாற்றிகொள்வார்கள் வேறு என்ன செய்ய முடியும் இவர்களால்!
யாருமற்ற வேலையில் கோழைபோல் நடந்து கொண்டானோ ? வீரம் நிறைந்தவர்கள் மத்தியில் இவன் மாட்டியிருக்க வேண்டும், அப்பொழுது இவனுக்கு நல்ல வெகுமதி கிடைத்திருக்கும்.
இவ்வளவு நடந்தும் யாரும் தடுக்கவில்லையா ? யாருமற்ற கோயிலா அது ? பராமரிக்கப்படும் ஆலயம் என்றால், ஒன்று அதில் ஆட்கள் இருந்திருக்க வேண்டும், அவர்கள் அதைத் தடுக்கும் முயற்சியை எடுத்திருந்தால் இது செய்தியாகவே வந்திருக்காது. அல்லது ஆட்கள் இல்லாத சமயங்களில் அதைப் பூட்டி கண்ட கழிசடைகள் உள்ளே நுழையாமல் தடுத்திருக்க வேண்டும். எதுவுமே நடக்காமல், கொடியுடன் வந்தான், உடைத்தான், பார்த்தோம் என்று பொதுமக்கள் சொல்வது வேதனை. இப்பொழுதெல்லாம் கண்முன்னே நடக்கும் அராஜகங்களை தட்டிக்கேட்கும் வீரமானவர்களுக்கும் விபரீதமே விளைவதால், யாரும் எதையும் தட்டிக்கேட்க முன்வருவதில்லை. பொதுமக்கள் ஒருங்கிணைந்து அவனைத் தடுத்து நாலு சாத்து சாத்தியிருந்தால் கேட்க எத்தனை மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.
இந்தியாவில் இராமர் ஆலய விவகாரத்திற்கு, இங்கே இனவெறி பத்திரிக்கைக்காரன் ” மஸ்ஜிட்டுக்குள் பன்றி புகுந்தது” என்று செய்தி எழுதினான், இப்போ நம் நாளிதழ்கள் இதை எப்படி எழுதும் ?