காலிட்: நான் ஐஜிபி ஆவற்கு முன்பே என் மகளின் நிறுவனம் துப்பாக்கி விற்பதற்கு உரிமம் பெற்று விட்டது

licenceஇன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்,  தாம்  போலீஸ்  படைத்  தலைவர்  ஆவதற்கு  முன்பே  தம்  மகளின்  நிறுவனம்  துப்பாக்கி  விற்பதற்கான  உரிமத்தைப்  பெற்று  விட்டது  என  விளக்கம்  அளித்துள்ளார்.

அரசாங்கத்துக்கோ  போலீசுக்கோ  ஆயுதம்  விற்கும்  குத்தகைகள்  பெறப்  போட்டியிடக்கூடாது  எனத்  தம்   மகளைத்  தடுத்து  வைத்திருப்பதாகவும்  அவர்  தெரிவித்தார்.

“நான்  போலீஸ்  தலைவராக  வருவதற்கு  முன்பே  ஆயுதம்  விற்பதற்கும்  பழுதுப்பார்ப்பதற்கும்  உரிமம்  பெற்று  விட்டார்கள்.

“அவர்கள்  அரசாங்க  டெண்டர்களுக்குப்  போட்டியிடுவதைத்  தடுத்து   வைத்துள்ளேன். அதனால்  அரசாங்கத்துக்கோ  போலீசுக்கோ  ஆயுதம்  விற்கும்  குத்தகை  எதுவும்  அவர்களுக்குக்  கிடைத்ததில்லை”, என பாங்கியில்  செய்தியாளர்களிடம்  காலிட்  கூறினார்.