இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புவரை தொகுதிப் பங்கீடு தொடர்பில் டிஏபி-யுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்ததாக சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறினார்.
“சர்ச்சையைத் தீர்த்துக்கொள்ள சில தீர்வுகளையும் முன்வைத்திருந்தோம். அவப்பேறாக, நேற்று நள்ளிரவுவரை டிஏபி-இடமிருந்து எந்தப் பதிலும் இல்லை”, என பாரு பியான் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
பிகேஆரின் தேசிய தலைமையும் மாநிலத் தலைமையும் கலந்துபேசியே வேட்பாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
“ தொகுதிப் பங்கீடு என்கிறபோது பக்கத்தான் ஹராபான் 95விழுக்காட்டு இடங்களுக்குப் பேச்சுகள் வழியே தீர்வு கண்டிருக்கிறது. ஐந்து விழுக்காட்டு இடங்களுக்கு மட்டும் உடன்பாடு காண முடியாதிருந்தது”, என்றாரவர்.
அதுவே, பெரிய சாதனைதான் என்றார்.
உருபடியா வேட்பாளரை தேர்வு செய்ய தெரியில, ஒருதன் பெங்க்ரப், ஒருதன் காணாம போய்ட்டான். இந்தா நிலைமையில் புத்ரா ஜெயா புடிக்க போறிங்களா. உங்களுக்குள் ஒற்றுமையே இல்ல. pkr கட்சியும் பாஸ் கட்சி போல அம்னோவுக்கு வெற்றியை உறுதி எல்ல வழியிலும் உதவுகிறது .
நல்லது
தாக்கி எழுதினால் பிரசுரிக்க மாடிரோ.
தாக்கி எழுதினால் பிரசுரிக்க மாடிரோ. நீயும் தமிழ் பத்திரிகைக்காரன் போலத்தான்.
சரவாக் தேர்தலில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட முடியாதவர்கள் எப்படி தேசிய நிலையில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்…?
பி.கே.ஆர். உறுபினர்கள் எல்லோரும் முன்னாள் அம்னோகாரர்கள் பாஸ் மற்றும் பி.கே.ஆர்.இந்த இருகட்சிகளை நம்பி வாக்களித்தால் அதோ கதிதான்!டி.ஏ.பி.சிந்தியுங்கள் இனம் இனத்தோடுதான் சேரும் ஞாபகமிருக்கட்டும்!
“ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” , எதிர்க்கட்சி இரண்டுபட்டால் ஆளும் கட்சிக்கு ஆதாயம்.