பிகேஆர் விட்டுக் கொடுத்தால் டிஏபியும் அவ்வாறே செய்யும்

lokeடிஏபி  சரவாக்கின்  பத்து  கித்தாங்கில்  பரப்புரையில்  ஈடுபடாது  அதேபோல்  பிகேஆரும்,  இரண்டு  கட்சிகளும்  களமிறங்கும்  மற்ற  ஐந்து  தொகுதிகளிலும்  பரப்புரையில்  ஈடுபடக்கூடாது. டிஏபி இப்படி  ஒரு  நிபந்தனையை  முன்வைத்துள்ளது.

“பிகேஆர் வேட்பாளர்கள்  அவர்களின்  பெயர்கள்  வாக்குச் சீட்டில்  இடம்பெறும்  என்றாலும்  அவர்கள் பரப்புரையில்  ஈடுபடப்  போவதில்லை  என்பதைப்  பொதுவில்  அறிவிக்க  வேண்டும்.

“அவர்கள்  அப்படிச்  செய்தால்  பத்து  கித்தாங்கில்   பரப்புரை  செய்ய  வேண்டாம்  என  எங்கள்  வேட்பாளருக்கும்  நாங்கள்  உத்தரவிடுவோம்”, என  டிஏபி  அமைப்புச்  செயலாளர்  அந்தோனி  லோக்  கோலாலும்பூரில்  கூறினார்.

பத்து  கித்தாங்  தொகுதியைத்  தவிர்த்து  மூலு,  முரும்,  சிமங்காங்,  இங்கேமா,  மம்போங்  ஆகிய  ஐந்து   இடங்களிலும்  பக்கத்தான்  ஹராபான்  பங்காளிக்  கட்சிகளான  பிகேஆரும்  டிஏபியும்  ஒன்றை  எதிர்த்து  மற்றொன்று  களமிறங்குகின்றது.