ஈப்போ ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்டதை உலக இந்து மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறிய உலக இந்து மன்றம் மலேசியா தலைவர் வி.கே. ரகு, இந்தச் சம்பவத்தை மனநிலை பாதிக்கப்படவர் செய்தார் என்று சமாளித்து தள்ளி விட முடியாது என்கிறார்.
இந்து சமயத்தை அவதூறு செய்த ஸக்கீர் நாயக்கை, நாட்டை விட்டு வெளியேற்றாமல், அவரை பாதுகாத்து, நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது உள்துறை அமைச்சு.
இந்துக்களை அவமதித்து, புண்படுத்திய அன்னிய நாட்டவரான அவருக்கு கொடுத்த முக்கியத்துவமானது இந்துக்களை உதாசினப்படுத்தும் வகையில் உள்ளது.
ஸக்கீர் நாயக்கின் பேச்சை முற்றிலுமாக தடை செய்வதை விடுத்து, அவர் பேச வேண்டிய தலைப்பை மட்டும் மாற்றி அவரை பேச அனுமதித்தது எந்த வகையில் நியாயம்? இந்து சமயத்தைப் பற்றி தப்பான வகையில் அவர் பேசிய பேச்சுகள் எங்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. இந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை கருதி அவரை இந்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கிறார் ரகு.
அதனைத் தொடர்ந்து, எங்கள் தலைவர்கள் குரல் கொடுத்ததற்கு பலிதீர்க்கும் படலமாக, மொலோடோவ் காக்டெய்ல் குண்டு வீசியதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் பிறகு இந்த கோயில் தெய்வச் சிலை உடைப்பு நடந்தேறி இருக்கிறது. உடைத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவரோ, பாதிக்கப்படாதவரோ என்பது முக்கியம் அல்ல.
இதற்குப் பின்னால் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும். உலக மத்தியில் இந்த மருட்டல்கள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களைத் தொடர்ந்து அவமானத்திற்கும், மன உலைச்சலுக்கும், அச்சத்திற்கும் இட்டுச் செல்லும் இந்தச் சம்பவங்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ரகு.
மேலும்,“எங்களுடைய கோரிக்கை, ஸக்கீர் நாயக்கை இந்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது மற்றும் எங்கள் தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் குண்டு வீசியவரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இந்த கோயில் தெய்வச் சிலை உடைப்பிற்கு மூல காரணமாக இருப்பவர்கள் கண்டறியப்பட வேண்டும்”, என்று ரகு கேட்டுக்கொண்டார்.
“இந்த கோயில் தெய்வசிலை உடைப்பிற்கு மூல காரணமாக இருப்பவர்கள் கண்டறியப் படவேண்டும்”
எதையுமே தீர விசாரிக்காமால் உடனே குற்றம் செய்தவர் மன நோயாளி என்றால், அத்தகாத செயலைச் செய்ய அவருக்கு எப்படி நேரமும் புத்தியும் இருக்கும்? மன நோயாளி என்று சான்றிதழ் ஒன்றை வாங்கிக் கொண்டு இன்னும் என்னவெல்லாமோ செய்யலாமே? அடுத்தவரும் இப்படிச் செய்ய ஆரம்பித்தால் நாடு என்னவாகும் என்று போலிஸ் தலைவர் சிந்திக்க வேண்டும்.
இதனால் நாம் அறிவது என்னவென்றால், நமது போலிஸ் தலைவர், மலாஇகாரகல் எல்லாம் புத்தி சுவாதினமானவர்கள் என்றும் அதனால் தான் அவர்கள் பல தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டார். ஹ…ஹ..
சில ஆண்டுக்களுக்கு முன்பு மன நிலை பாதிக்கப்பட்ட இந்திய ஆடவர் ஒருவரை பட்டப்பகலில், வீதியில் வைத்து அடித்து, உதைத்து கொலையே செய்தனர், வேறெங்கும் இல்லை, நம் நாட்டில்தான், அந்த நபரை பூட்ஸ் கால்களால் மிதித்துக் கொன்றது யார் ? அந்த நபருக்காக அவரை வளர்த்தவர் எனக்கூறி வயோதிகர் ஒருவர் நீதிமன்றத்தை நாடினாரே, அவருக்கு என்ன நியாயம் கிடைத்தது ? இந்நாட்டில் மனநிலை பிறழ்ந்தவனுக்குக்கூட நியாயம் இனம் பார்த்துத்தான் வழங்கப்படுகிறது. வாழ்க ஜனநாயகம், வருத்தத்துடன்….. 🙁
இந்த நாட்டு சிறு பான்மை இந்தியர்கள் ஆகிய நாம்..அரசாங்கத்திடம் அறைகூவல்,கோரிக்கைதான் வைக்க முடியுமேயொழிய வேறு ஒன்றும் பண்ண இயலாது சாகிர் நாயக்கை நாட்டுக்குள் அனுமதிக்ககூடாதேன்று எல்லா தரப்பினரும் அறைகூவல் விடுத்தும் பயனில்லை!!விளைவு இந்து ஆலய சிலைகள் உடைப்பு…பிரதமரே சாகிர் நாயக்கை தன்னுடைய அலுவலகத்தில் வரவேற்று உபசரித்தார் என்பது நாடே அறிந்ததுதான் நம்பிக்கை பிரதமர் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிதாரா!இதற்கு மூல காரணமே பாரிசான் நேஷலின் இந்திய உருப்புகட்சிகளின் தலைவர்கள் தங்களின் பதவிகள் அரசாங்க அனுகூலங்களுக்காக கண்மூடித்தனமான ஆதரவை வழங்குவதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ வாய்ப்புண்டு!
BN-ல் நமது இந்திய உறுப்பு கட்சித் தலைவர்கள் இடம் பெற்றிருப்பது அவர்களின் சொந்த அபிலாஷைகளையும்,தங்களின் குடும்ப பொருளாதார கட்டமைப்பை உயர்த்திக் கொள்வதற்காகவும்தான்.மற்றபடி தங்களை சார்ந்த சமூகத்தின் பிரச்சனைகளுக்கு அந்த சுயநல விஷமிகள் அதிகார தரப்பிடம் குரல் கொடுப்பார்கள் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.அந்த அளவுக்கு அவர்களிடம் தரமான “சரக்கு” எதுவும் கிடையாது.இந்த வெண்ணை வெட்டி வெங்காயங்களில் எவனுக்காவது நமது தன்மானத் தமிழன் வேதமூர்த்தி அவர்களை பின்பற்றி ராஜினாமா செய்ய துணிவு வருமா?
மனங் கெட்ட தமிழ் சமுதாய தாழ்கொண்ட நாம் இனி அவர்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும்.
நியாயமான அறைக்கூவலுக்கு செவி சாய்க்காத பிரதமரை நாம் ஏன் வணங்கி நமது பண்பாட்டு நிகழ்வுகளுக்கு வரவேற்க வேண்டும். தைப்பூசத்தில் அவருக்கு ஏன் முதல் மரியாதை செய்யப் பட வேண்டும்? இந்து, சீக்கியர் நிகழ்சிகளுக்கு அவருக்கு ஏன் முதல் மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும்? தென் இண்டியன் மொழி வாரியாக கொண்ட சங்கங்களின் பொது நிகழ்வுக்கு அவருக்கு ஏன் முதல் மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும்? எல்லாமே மானியத்திற்காக அவர் காலில் வீழ்ந்து கிடந்தால் நமக்கு மதிப்பு கிடைக்குமா? நமது அறைக்கூவலுக்கு செவி சாய்ப்பாரா? இப்படி நாகரிகமாக மானியம் வாங்குவதை நமது சமூகம் பிச்சையாக கருதுவதில்லை மாறக மானியம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இதனையே ஏழை இண்டியன்கள் அரிசியும் பருப்புமாக பெற்றால் அதனை நாம் இகழ்கிறோம். அரசியல் பிச்சை என்று ஏழை இண்டியன் மக்களைப் பார்த்து கூப்பாடு போடுகின்றோம். ஆளுக்கொரு நியாயம்!
நமது உணர்வுகளை மதிக்காத இப்படிப்பட்ட பிரதமரை நமது நிகழ்வுகளுக்கு அழைப்பதில் இருந்து புறக்கணித்தால் அவர் முகத்தில் அறைந்தார் போல் உணர்வார். அப்பொழுது நமது உணர்வுகள் அவருக்கும் புரிய வரும். மானியத்தை மறந்து இதனைச் செய்வார்களா வசதி படைத்த இந்துக்களும், சீக்கியர்களும்? இதைச் செய்ய முடியாது என்றால் இனி ஏழை இண்டியன்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து பெரும் அரிசிக்கும் பருப்புக்கும் நாம் அவரை தூற்றக் கூடாது. அவர்கள் அரிசியையும் பருப்பையும் பெற்றுக் கொண்டு தே. மு. அரசாங்கத்திற்கு வாய்க்கரிசிப் போடுவதை நாம் குறை சொல்லக் கூடாது.
மானமுள்ள தமிழ் சமுதாயமே! அரசியல் மாற்றம் விரைவில்,அதுவரை பொருத்தாளவேண்டும்…
“நமது தன்மானத் தமிழன் வேதமூர்த்தி (???) அவர்களை பின்பற்றி ராஜினாமா செய்ய துணிவு வருமா?” – தன்மானத் தமிழன் என்றால் பதவியை ஆரம்பத்திலேயே ஏற்றிருக்க மாட்டான் !!!
பதவியை ஏற்றதனால்தான் உலகத்திற்கு தெரிய வந்தது நஜீப் ஒரு குள்ள நரி என்று.
நாட்டின் பிரதமர் என்ற மரியாதை நிமித்தம் நமது நிகழ்வுகளுக்கு அவரை அழைக்கிறோம் ,அவரும் வெறும் கையோடு போக கூடாது என்று சிறிது மொய் வைத்து விட்டு போகிறார் , நிகழ்ச்சி நடத்தும் நமது தலைவர்களுக்கு கையை கடிக்காமல் இருக்குமல்லவா !! பிறகு எதற்கு பொது சேவை செய்ய வந்தோம் ,தேனெடுக்கும் புறங்கையை நக்கத்தானே !! சமுதாயமா !! மண்ணாங் கட்டி !! தானை தலைவன் என்று மக்களை சுரண்டி ,வெளிநாடு சென்று மயிரை நட்டு கொண்டு வந்ததுதான் சாதனை !! தன்மானத் தமிழனா !! அவன் யாருடா வேட்று கிரகத்தை சேர்ந்தவனோ !! இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை !! பந்தியில் நமக்கு இடம் இல்லை !! இலை ஓட்டை என்று குறை வேறு !!