நாட்டில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகிவரும் வேளையில் இவ்வாண்டு மேதினப் பேரணி தொழிலாளர் நலன்மீது கவனத்தைத் திருப்பும் நோக்கத்தைக் கொண்டிருக்கும்.
மலேசியாவைக் காக்கும் முயற்சியில் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பார்டி சோசலிஸ் மலேசியா தலைமைச் செயலாளர் ஏ.சிவராஜன் கூறினார்.
“நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால், தொழிலாளர்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதன்மூலமாகத்தான் மலேசியாவைக் காக்க முடியும்.
“மக்கள் விவகாரங்கள் பல ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றன. 1எம்டிபிமீதும் நஜிப்பைப் பதவி விலகச் சொல்வதிலும்தான் கவனம் செலுத்தப்படுகிறது”, என சிவராஜான் கோலாலும்பூரில் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்வாண்டு மேதினப் பேரணிக்கான கருபொருள், “தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மலேசியாவைக் காப்போம்”.
PSM கட்சி தொழிலாளர்களுக்காக போராடும் ஓர் சுயநலமற்ற கட்சி. வாழ்த்துக்கள். ஆனால் நமது நாட்டில் உள்ளூர் தொழிலாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம். இதை கருத்தில் கொண்டு, கட்சி சில வரை முறைகளை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பி எஸ் எம் கட்சிபோல் ஒரு சிறந்த கட்சியை காண்பது சிரமம் அவர்களது போராட்டத்தை கண்டு பல வேளைகளில் வியந்த்ததுண்டு!கட்சிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வேலை வாய்ப்புகள் தொழிலாளர்களின் வேலை பிரச்சனைகள் இவை அனைத்தும் பி என் அரசாங்க கட்டுபாட்டில் உள்ளது…பி எஸ் எம் சிறந்த மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டுவந்தால் மிக்க நன்று