எட்டு மலாய்க்காரர்கள் டிஏபி-இல் சேர்ந்திருப்பதாக பினாங்கு டிஏபி அறிவித்தது. அவர்களில் இருவர் முன்னாள் பாஸ் உறுப்பினர்கள். ஒருவர் பக்கத்தான் பங்காளிக் கட்சியிலிருந்து கட்சி மாறியுள்ளார்.
இந்த எண்மரில் பிரபலமானவர் ஆகாயப்படையின் முன்னாள் மேஜர் ஜைடி அஹ்மட்.
பினாங்கு, கப்பாளா பத்தாசைச் சேர்ந்தவரான ஜைடி, 2013 பொதுத் தேர்தலின்போது அழியா மை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போலீஸ் புகார் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014-இல் இராணுவ நீதிமன்றம் ஜைடியைப் பணிநீக்கம் செய்தது. அதன் பின்னர் பாஸில் சேர்ந்த அவர் பிறகு அமானாவுக்குச் சென்று இப்போது டிஏபி-இல் வந்துள்ளார்.
டிஏபிதான் தனக்குப் பொருத்தமான இடம் என்றவர் நினைக்கிறார். “நான் இன்னமும் பக்கத்தான் ஹராபானில்தான். அதுதான் முக்கியம்”, என்றார்.