சரவாக் மம்போங் தொகுதியில் போட்டியிடும் சஞ்சான் டயிக், கம்போங் கிட்டிங்கில் ‘சரவாக்கின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளப்பத்துக்கும் தன்னாட்சி அதிகாரத்துக்கும் பிஎன்னுக்கு வாக்களிப்பீர்’ என்று பதாகைகள் தொங்க விடப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறினார். ஏனென்றால் அப்பகுதியின் மேம்பாட்டுக்குப் பணம் செலவிட்டது டிஏபியாம்.
“2014-இல் டிஏபி அதன் ‘இம்பியான் சரவாக்’ திட்டத்தின்கீழ் இச்சாலையை நிர்மாணித்திருக்க பிஎன் இப்படி ஒரு பதாகையை வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக பிஎன் இதைக் கவனிக்காமல் விட்டிருந்தது”, என டயிக் கூறினார்.
மலேசியா முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் சொந்தப் பணத்தில் சரவாக் வந்து அமைத்துக் கொடுத்த சாலை அது என்றாரவர். சாலையைக் கட்டி முடிக்க ரிம140,000 செலவானதாம்.
“சுதந்திரம் பெற்றதிலிருந்து பிஎன் செய்ய முடியாததை அவர்கள் செய்து கொடுத்தார்கள்”, என்றாரவர்.
இதனிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் சரவாக்கின் வட பகுதியில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.
மாநில முதல்வர் அடினான் சாதேம், சிபுவில் நீண்ட வீடுகளுக்குச் சென்றுள்ளார். இன்றிரவு டுடோங்கில் அவர் செராமா ஒன்றில் கலந்து கொள்வார்.
எதிரணியைப் பொருத்தவரை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மம்போங் செல்கிறார். பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று சரவாக்கில் பரப்புரையை முடித்துக்கொள்ளக் கூடும்.
பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்றிரவு சிபு செல்கிறார்.
ஜாக்கிரதை !!! அதற்கும் கணக்கு கேட்பார்கள்….. நம் ஊழல் தடுப்பு அதிகாரிகள்….
அடுத்தவர் உழைப்பில் ஆதாயம் தேடும் நரிக்குணம். இதெல்லாம் ஒரு பொழப்பா ?