அடினான்: சீன அமைச்சர்களா, டிஏபியா? சீன வாக்காளர்களே முடிவு செய்ய வேண்டும்

sambutசரவாக்  தேர்தலில்  சீனர்களின்  வாக்குகளைக்  கவர  ஒரு  தந்திரத்தைக்  கையாண்டு  வருகிறார்  முதலமைச்சர்  அடினான்  சாதேம்.

“சீனர்கள்  அரசாங்கத்தில்  பங்கேற்க விரும்புகிறார்களா,  இல்லையா  என்பதை  சனிக்கிழமை  முடிவு  செய்தாக  வேண்டும்.

“நீங்கள்  எல்லாம்  டிஏபி-யை  ஆதரித்தால்  அரசாங்கத்தில்  இருக்க  மாட்டீர்கள்.  என்  சீன  வேட்பாளர்களான  தியோங்  தாய்  கிங்,  வொங்  சூன்  கோ  ஆகியோரை  ஆதரித்தால்  அரசாங்கத்தில்  நீங்களும்  இருப்பீர்கள்.

“அரசாங்கத்தில்  பங்கேற்க  நினைத்தால்  என்ன  செய்ய  வேண்டும்  என்பது  உங்களுக்குத்  தெரியும்”, என்றவர்  வலியுறுத்தினார்.

தியோங்கும்  வொங்கும்  டுடோங்,  பாவாங்  அசான்  தொகுதிகளில்  பிஎன்  நேரடி  வேட்பாளர்கள்.  ஜெனட்  லாவ்  மற்றொரு  பிஎன்  நேரடி  வேட்பாளர்.

நேற்றிரவு  தாய்  க்வாங்  சீனத்  தொடக்கநிலைப்  பள்ளியின்  85ஆம்  ஆண்டு  விருந்தில்  கலந்துகொண்டு  அடினான்  பேசினார். அப்பள்ளிக்கு  ரிம500,000 நன்கொடையையும்  முதலமைச்சர்  வழங்கினார்.