சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, மே 4-இல் மீண்டும் சரவாக் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அப்படிச் செல்லும்போது சரவாக்கில் நுழைய முதலமைச்சர் அடினான் சாதேமுக்குக் கடிதம் எழுதி அனுமதி கோர மாட்டார். சரவாக் செல்ல விரும்பும் அரசியல்வாதிகள் முன்கூட்டியே அனுமதி கேட்டால் அவர்களின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்று அடினான் கூறியிருந்தார்.
“எதற்கு அனுமதி கேட்க வேண்டும்? மலேசியக் குடிமகன் என்ற முறையில் நாடு முழுக்கச் செல்லும் உரிமை எனக்குண்டு.
“அடினானின் கோரிக்கை அவரது ஆணவத்தைத்தான் காண்பிக்கிறது. இது நாடுமுழுக்கச் செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலேசியர்களுக்குமுள்ள உரிமையை அவமதிப்பதாகும்”, என அஸ்மின் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியக் குடிமகன்கள் அங்கு ‘தண்ணி’ அடிக்கப் போனால் ஒருவேளை அனுமதி கிடைக்கும்! அரசியல் பேசப் போனால் ஆணவம் தான் கிடைக்கும்!