பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாருக்கு சரவாக் நுழைய விதிக்கப்பட்ட தடை அகற்றப்படவில்லை. சரவாக்கில் நுழைய முதலமைச்சர் அடினான் சாதேமுக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டதுகூட பயனளிக்கவில்லை.
லெம்பா பந்தாய் எம்பியான நூருல் இன்று காலை மீரி விமான நிலையம் சென்றபோது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதை பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் உறுதிப்படுத்தினார்.
அதன் தொடர்பி டிவிட் செய்திருந்த நூருல், கடந்த வெள்ளிக்கிழமையே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தும்கூட தாம் திருப்பி அனுப்பப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
நூருல் இஸ்ஸா கடந்த டிசம்பரில் சரவாக் செல்ல முற்பட்டபோது முதலாகத் தடுக்கப்பட்டார்.
கூடிய சீக்கிரம் நீங்கள் இப்போது இருக்கும் மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்குப் போகக் கூடாது என்று தடை வரும்! ஆமாம்! மந்திரி பெசார் நினைத்தால் எதுவும் நடக்கலாம்! அதற்கும் தயாராக இருங்கள் நஜிபை பகைத்துக் கொண்டால் எதுவும் நடக்கும்!
பயம் சூல்ந்து கொண்டது
காடுக்காரன் மதிகேட்டவனின் பேச்சை கேட்டு இவ்வாரி செய்கிறான்.தரமற்ற பி என் அரசியல்வாதிகள்.