சரவாக்கில் முதல் வாக்களிப்பு இன்று தொடங்கியது. அம்மாநிலம் முழுவதிலுமுள்ள பாதுகாப்புப் படைகள் இன்று முன்கூட்டியே வாக்களிக்கத் தொடங்கினர். முன்கூட்டிய வாக்களிப்பு மட்டுமே இன்று. முக்கியமான வாக்களிப்பு மே7-இல்தான்.
அந்த மிகப் பெரிய நாளுக்காக அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பரப்புரை செய்வதற்காகவே ஸ்ரீஅமானிலும் கூச்சிங்கிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் நடைப்பயணமாகவே சென்று பரப்புரை செய்கிறார் நஜிப். முதலமைச்சர் அடினான் சாதேம் மீரியிலிருந்து பிந்துலு சென்றுள்ளார்.
எதிரணியைப் பொருத்தவரை, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று காலை சிபுவில் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்தினார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் செய்தியாளர் கூட்டம் கூச்சிங்கில் நடைபெறுகிறது.
லிம் நாளைவரைதான் சரவாக்கில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலக்கெடுவை எதிர்க்கப்போவதில்லை என்று கூறிய லிம் நாளை அங்கிருந்து வெளியேறப்போவதாகக் கூறினார்.