பங்களா விற்றவரின் சத்திய பிரமாணம்மீது மேல்நடவடிக்கை இல்லை

phang hoபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  இப்போது  வைத்துள்ள  பங்களா  வீட்டின்  முன்னாள்  சொந்தக்காரரான  பாங்  லீ  கூன்-னின்  சத்திய  பிரமாணத்தின்மீது  மேற்கொண்டு  நடவடிக்கை  எடுப்பதில்லை  என்று  முடிவு  செய்யப்பட்டுள்ளது.

சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  சில  நாள்களுக்குமுன்  அம்முடிவுக்கு  வந்ததாக  பினாங்கு  போலீஸ் தலைவர்  அப்துல்  கபார்  ரஜாப்  தெரிவித்தார்.

இதற்குமு  பாங்,  பொய்யான  சத்திய  பிரமாணம்  செய்தார்  என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பாங்,  பினாங்கு  அரசுடன்  தொழில்  தொடர்பான  தொடர்புகள்  எதுவும்  தனக்குக்  கிடையாது   என்று  சத்திய  பிரமாணத்தில்  குறிப்பிட்டிருந்தார்.