சரவாக்கைக் காப்பாற்ற டிஏபி-யைக் காப்பீர் என வாக்காளர்களிடம் கரம் நீட்டி உதவிகேட்டிருக்கிறார் லிம் கிட் சியாங்.
சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேமும் மாநில பிஎன்னும் டிஏபியின் பலத்தைக் குறைப்பதற்கு வெகுவாக முயன்று வருகிறார்கள் என லிம் எச்சரித்தார். அவர்களின் முயற்சி வெற்றி பெறுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
முந்தைய தேர்தலில் டிஏபி 15 இடங்களில் போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியது. இப்போது 31 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. பார்வையாளர்கள் இது அகல கால் வைக்கும் முயற்சி என்று அபாய அறிவிப்பை எழுப்பியுள்ளனர்.
அதன் அபாயத்தை டிஏபி அறிந்தே உள்ளது என்று கிட் சியாங் கூறினார். ஆனாலும், அது சீனர்களின் கட்சி என்ற தோற்றத்தை உடைத்தெறிய விரும்புகிறது டிஏபி. மேலும், தீவகற்பத்துக் கட்சியாக அடங்கி ஒடுங்கி இருக்கவும் அது விரும்பவில்லை என்றாரவர்.
“அகலக் கால் வைத்து விட்டதாக ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். மாநிலம் முழுவதும் டாயாக் பகுதிகளில் பரப்புரை செய்து இருக்கும் வளங்களை விரயமாக்காமல் ஐந்தாண்டுகளுக்குமுன் வெற்றிபெற்ற 12 இடங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.
“சரவாக் டிஏபி ஆபத்தான வியூகத்தைதான் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறது……என்றாலும் அதுதான் சரியான முடிவு. ஏனென்றால் டிஏபி இன, சமய, வட்டார வேறுபாடின்றி எல்லா மலேசியர்களையும் பிரதிபலிக்கும் விரும்பும் கொள்கையுள்ள அரசியல் கட்சியாகும்”, என்று லிம் குறிப்பிட்டார்.
சென்ற முறை[2011] வென்ற 12 தொகுதியிலும், வென்றவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால், இப்படி வாக்காளர்களிடையே ‘காப்பாற்றுங்கள்’ என கெஞ்சி கூத்தாட வேண்டியதில்லை. அப்படியே ஒரு சிலர் ஒழுங்காக வேலை செய்தவர்களையும் நீக்கிவிட்டு, இம்முறை தங்களுக்கு வேண்டியவர்களையும், ‘கூஜா’ தூக்குபவர்களுக்கும் சீட்டு கொடுத்துள்ளது சரவாக் டி.எ.பி. உதாரணத்திற்கு பூஜுட் தொகுதியில் சென்ற முறை நாலாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற பொங் பௌ டேக்கிற்கு இம்முறை சீட்டு இல்லை. நல்ல சேவையாளரான இவர் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டிடுகிறார். அதே போன்று சென்ற முறை பத்து லிந்தாங்கில் போட்டியிட்டு வென்ற சிறந்த சேவையாளரான வூன் லீ சானுக்கும் இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. போதாக்குறைக்கு சீட்டு வெறிப்பிடித்து டி.எ.பி.யும் பி.கே.ஆறும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்கின்றன. ‘அப்பனையும்’, ‘மவனையும்’ ஏன் சரவாக்கின் உள்ளே விட்டார்கள் என அரசியல் அறிந்தோருக்கு நன்றாகவே தெரியும். பக்காத்தானை கொல்பவர்கள் உள்ளுக்குள்ளேயே உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவன் என்றால், போராட்ட குணமே நிறைந்திருக்கவேண்டும். ‘கப்பல் மூழ்கப் போகிறது, தூக்கி விடுங்கள்’ எனக் கதறுவது பேடித்தனம். தோல்வியே வரினும், மீண்டும் களத்தில் குதிப்போம் என கொக்கரிப்பவனே வீரன். கிட சியாங் கிற்கு காயத்ரி கடை புடவை வாங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
நீங்க இப்படி செஞ்ச, அப்புறம் ஏன் பாஸ்காரன் நீங்க சீனன் முல் அமைச்சரா வர முயலுரானு சொல்ல மாட்டான்.