கூடுதல் எண்ணெய் உரிமப் பணம் கேட்க இது நேரமல்ல- பிரதமர்

oilஎண்ணெய்  விலை  வீழ்ச்சி  அடைந்திருப்பதால் எண்ணெய்  உரிமப் பணத்தைக்  கூட்டிக்  கொடுக்க  இது  சரியான  நேரமல்ல  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“இவ்விவகாரத்தைப்  பரிசீலிக்க  இது  நேரமல்ல.  நாட்டின்  வருமானம்  இக்கட்டான  நிலையில் உள்ளது. எண்ணெய் விலை  வீழ்ச்சியால்  ரிம40 பில்லியனை  இழந்து  விட்டோம்”, என்று  அவர்  சுட்டிக்காட்டினார்.

ஆனாலும்  அரசாங்கம் சரவாக்குக்கு  அதன்  கடப்பாட்டை  நிறைவேற்றியுள்ளது.  போர்னியோ  நெடுஞ்சாலை  அமைக்க  உள்ளது.  மாநில  மேம்பாட்டுக்காக  ரிம3.5 பில்லியன்  ஒதுக்கப்பட்டுள்ளது  என்றாரவர்.

சரவாக்கின்  மேம்பாட்டுத்  தேவைகளை  அரசாங்கம்  கவனித்துக்கொள்ளும்  என்றும்  பட்ஜெட்டுக்கு  அப்பாலும்  அதற்கு  ஒதுக்கீடுகள்  செய்யப்படும்  என்றும்  பிரதமர்  கூறினார்.