சரவாக்கில் நகர்ப்புற சீனர்களின் ஆதரவு பிஎன்னுக்குத் திரும்பவும் கிடைக்கும் என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நம்புகிறார்.
பராமரிப்பு முதலமைச்சர் அடினான் சாதேமின் ஆட்சியில் சீனர்கள் மனம் மாறியிருக்கிறார்கள் என்றாரவர்.
“முந்தைய தேர்தல்கள்போல் இல்லை.
“அரசாங்கத்தில் சீனர்களின் பிரதிநிதித்துவம் வலுவாக இருக்க வேண்டும். சீனர்கள் துணை அமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுவதை விரும்புகிறேன்”, என ஜாஹிட் கூறினார்.
சீனர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தால் ஒரு சீனரைத் துணை முதல்வராக நியமிக்குமாறு அடினானிடம் பரிந்துரைக்கவும் தயார் என்று அவர் சொன்னார்.
மல்லாக்க படுத்துக்கொண்டு வாயை திறந்துக்கொண்டு இரு எல்லாமே நடந்து விடும் .
முதலமைச்சராக நியமிக்க பரிந்துரை இல்லையா?