முஸ்லிம் பூமிபுத்ரா ஒருவர் சரவாக்கின் முதலமைச்சராவதையே பாஸ் விரும்புவதால் அங்கு டிஏபி ஆட்சி அமைக்க அது ஒருபோதும் அனுமதிக்காது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
இந்தியர்களையும் சீனர்களையும் குடிமக்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், தலைவர் மலாய் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். கூச்சிங், தாமான் சுக்மாவில் 250 பேர் கலந்துகொண்ட செராமா ஒன்றில் ஹாடி இவ்வாறு கூறினார்.
“பூமிபுத்ராக்கள்தாம் சரவாக்கை ஆள வேண்டும். அதுவும் முஸ்லிம் பூமிபுத்ரா ஆள்வதையே பாஸ் விரும்புகிறது”, என பாஸ் தலைவர் வலியுறுத்தினார்.
கிறிஸ்துவ மக்களையும், பூர்வீக மக்களையும் எதிர் கட்சிக்கு ஓட்டுப் போட வைக்க இத்தகையைப் பேச்சு இன்னும் வேண்டும். வாழ்க ஹடி அரசியல்.
இன வெறி பிடித்த ஹாடி உன்னை நம்பி இந்தியர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களித்தால் எங்களைபோல் முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள்…உனக்கு ஏழரை சனிதான்!
இந்தியர்களையும், சீனர்களையும், மலாய்க்காரர்களையும் இந்நாட்டு குடிமக்களாக ஏற்றுக் கொண்டது நீங்களும் அல்ல உங்க அப்பன் அவாங்கும் அல்ல. கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷாரை எதிர்த்து ரத்தம் சிந்திய போராட்டத்தின் வழி, மலாயாவுக்கு [பின்னர் மலேசியா] 1957ல் மேற்சொன்ன இந்த மூவினமும் இந்நாட்டு குடிமக்கள் ஆனார்கள். வரலாறுகளை மாற்றிப் பேசுவதால், பொய்கள் உண்மையாகி விடாது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்நாட்டில் காடு மேடுகளை வெட்டி ஆயிரக்கணக்கில் உயிர்களை தியாகம் செய்து மலாயாவை வளமாக்கியவர்கள், பிரிட்டிஷாரால் இந்தியாவிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்ட இந்தியர்களும், ஈயம் தோண்ட சீனாவிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்ட சீனர்கலுமே ஆவர். ……………..இனத்தையும் மதத்தையும் பேசிப் பேசியே வளமுள்ள ஒரு நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டீர்கள்.
மக்கி போன மூலை உடைய பிலாச்சன் ….. பேசும் பேச்சி.