பாஸ், அதன் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதற்காகக் கட்சியிலிருந்து விலக்கப்படுவதாக இன்று அறிவித்தது.
ஹுசாம் விவகாரத்தைப் பல கோணங்களில் ஆராய்ந்தும் கட்சி நலன் கருதியும் ஹுசாமின் நடவடிக்கைகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரை விலக்குவது என்ற முடிவுக்கு வந்தது.
ஏப்ரல் 23-இல் கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ஹுசாமின் செயல்கள் கட்சி விதிமுறைகளை மீறுவதாக முடிவு செய்தது.
“எனவேதான் ஹுசாமை நீக்குவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது”, என அக்குழுவின் தலைவர் டாக்டர் சனுசி டயிங் மர்யோக் கூறினார்.
ஹுசாம் முசா அமானா கட்சியில் சேர்ந்து விடுவார். அடுத்து வரப்போகும் சுங்கை பெசார், கோலக்கங்க்சார் ஆகிய நாடுளுமன்ற தொகுதிகளில் நடைப்பெற போகும் இடைத்தேர்தல்களில் பாரிசானை எதிர்த்து பாஸ் கட்சியும், அமானா கட்சியும் போட்டியிட்டு பாரிசானுக்கு எளிதான வெற்றியைத் தேடித் தரப் போகிறது. சென்ற பொதுத் தேர்தலில் சுங்கை பெசாரில் வெறும் 399 வாக்குகளிலும், கோலக்கங்க்சாரில் 1082 வாக்குகளில் மட்டுமே பாஸ் கட்சி பாரிசானிடம் தோல்வியுற்றது. சுங்கை பெசாரில் BN 18,695 வாக்குகள். PAS18,296. கோலக்கங்க்சாரில் BN14,218. PAS13,136