எண்ணெய் உரிமப் பணம்மீதான பேச்சுகளை ஒத்திவைக்க சரவாக் இசைவு

priceஎண்ணெய்  உரிமப்  பணம்  அதிகரிக்கப்பட வேண்டுமென்ற  கோரிக்கையை  ஒத்திவைப்பது  என  சரவாக்  அரசு ஒருமனதாக  முடிவு  செய்துள்ளது.

உலகச்  சந்தையில்  கச்சா  எண்ணெய்  விலை  படுவீழ்ச்சி  அடைந்திருப்பதைக்  கருத்தில்  கொண்டு  அம்முடிவு  செய்யப்பட்டதாக  சரவால்  வீடமைப்பு,  சுற்றுலா  அமைச்சர்  அமார்  ஆபாங்  ஜொஹாரி  ஓபெங்  தெரிவித்தார்.

இவ்விவகாரம்  தொடர்பில்  தோக்  நானுடன்( முதலமைச்சர்  அடினான்  சாதேம்) கலந்துரையாடல்  நடத்தப்பட்டதாக  அவர்  சொன்னார்.

“கச்சா  எண்ணேய்  விலை யுஎஸ்$120- இலிருந்து குறைந்து  யுஎஸ்30-35 ஆக  இருக்கிறது.  அதாவது  நாட்டின்  வருவாய்  கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது  என்பதை  அனைவரும்  ஒப்புக்கொண்டோம்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.