சரவாக் தேர்தல்: வாக்களிப்பு மெதுவாக நடைபெறுகிறது

ballotஇன்று  சரவாக்கில்  வாக்களிப்பு  நாள். சரவாக்  மக்கள்  அடினான் சாதேமின்  பிஎன்னைத்  தேர்ந்தெடுப்பார்களா  அல்லது  ஆளும்  கட்சிக்கு  மூன்றில்  இரண்டு  பங்கு  பெரும்பான்மை  கிடைப்பதைத்  தடுக்க  முனைந்திருக்கும்  எதிரணியினருக்கு  வாக்களிப்பார்களா  என்பது  இன்று  தெரிந்து  விடும்.

இத்  தேர்தல்  புதிய  மாநிலத்  தலைவர்  அடினான்  சதேமுக்கு  உறுதியான  ஆதரவு  இருப்பதைப்  புலப்படுத்தும்  என  சரவாக்  பிஎன் நம்புகிறது.  அதேவேளை  எதிரணியினர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சம்பந்தப்பட்ட  ஊழல்  விவகாரங்கள்  ஆளும்  கட்சியின்  வாக்குகள்  சிலவற்றைத்  தங்கள்  பக்கம்  கொண்டுவரலாம்  என  எதிர்பார்க்கின்றன.

வாக்களிப்பு  காலை  8 மணிக்குத்  தொடங்கியது.  மாலை  5 மணிக்கு  அது  முடிவுக்கு  வரும். இரவு  ஏழு  மணி  வாக்கில்  முடிவுகள்  தெரிய  வரலாம்.

இன்று  காலை  11  மணிவரை  31விழுக்காட்டினர்தாம்  வாக்களித்திருக்கிறார்கள்  எனத்  தேர்தல்  ஆணையம்  கூறிற்று.