குவான் எங்கிடம் நேற்று ஒன்பது மணி நேர விசாரணை நடத்திய எம்ஏசிசி இன்றும் விசாரணையைத் தொடர்கிறது

quizமலேசிய ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி),  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  குறைந்த  விலைக்கு  பங்களா  வீடு  வாங்கியதன்  தொடர்பில்  முதலைமைச்சர்  உள்பட  ஆறு  பேரிடம்  நேற்று  விசாரணை  நடத்தியது.

“அவர்கள்  காலை  9.30க்கு  பினாங்கு  எம்ஏசிசி  அலுவலகம்  வந்து  இரவு  ஏழு  மணிவரை  வாக்குமூலம்  வழங்கினர்”, என  அந்த  ஆணையம்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“லிம்மிடம்  இன்றும் வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்”  என  ஊழல்-தடுப்பு  ஆணையம்  கூறிற்று.

விசாரணைக்கிடையில்  அவர்களுக்கு  மூன்று-மணி  நேர  உணவு  இடைவேளையும்  விடப்பட்டது.

இவ்விவகாரம்  தொடர்பில்  இதுவரை 65  பேரிடம்  வாக்குமூலம்  பெற்றிருப்பதாக  எம்ஏசிசி  கூறியது.