சுந்தரனின் அகால மரணம் அமைச்சுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பு

 

sundaran1தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப்பொருள்கள் அமைச்சின் தலைமைச் செயலாளர் சுந்தரன் அண்ணாமலை, 58, அகால மரணமடைந்தது அமைச்சுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

மிக உயர்ந்தத் தகுதிகளைப் பெற்றிருந்த சுந்தரன் அரசாங்கத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்ந்தப் பதவிகளை வகித்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை ஹெலிகோப்டர் விபத்தில் காலமான அவர் வாஷிங்டனில் உலக வங்கியின் வாரியத்தில் செயல்முறை இயக்குனராக பணியாற்றியுள்ளதோடு புருணை, ஃபிஜி, இந்தோனேசியா, லாவோஸ், மலெச்சியா, மியன்மார், நேப்பால், சிங்கப்பூர், தாய்லாந்து, தோங்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அடங்கியப் பிரிவையும் பிரதிநிதித்துள்ளார்.

தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப்பொருள்கள் அமைச்சின் துணை அமைச்சர் நோரியாவும் சுந்தரனும் அவர்களுடைய அமைச்சு சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக பெதோங் சென்றிருந்தனர்.

தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப்பொருள்கள் அமைச்சில் பொறுப்பேற்பதற்கு முன்பு சுந்தரன் நிதி அமைச்சில் 2014 ஆம் ஆண்டிலிருந்து தேசிய வியூகப் பிரிவின் இயக்குனராகப் பணியாற்றினார்.

ஜப்பான், தோக்கியோ, இன்டர்நேசனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டம் பெற்ற சுந்தரன், யுஎஸ்எம்மில் பிஎஸ்சி (BSc ED (Hons)) பட்டம், இந்தானிலிருந்து பொதுநிர்வாகத் துறையில் (Public Management) டிப்ளோமா, லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து எல்எல்பி (LLB (Hons)) பட்டம், மலாயா பல்கலைக்கழகத்திலிருந்து சிஎல்பி (CLP) சான்றிதழ், யுஎஸ் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்திலிருந்து எம்பிஎ (நிதி) (MBA (Finance)) பட்டம் ஆகிய கல்வி தகுதிகளையும் பெற்றுள்ளார்.

பேராக், தைப்பிங்கைச் சேர்ந்த சுந்தரன், திலகவதியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.