இவ்வருடம் நடத்தப்பட வேண்டிய மசீசவின் கட்சி தேர்தல் தள்ளிப் போடப்பட்டுள்ளது. 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சியின் தேர்தல் நடத்தப்படும் என்று மசீச இன்று அறிவித்தது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவதற்கு ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டது என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.
நேற்று நடந்து முடிந்த சரவாக் தேர்தல் திசை மாற்றங்களைக் காட்டுகிறது என்று கூறிய லியோ, டிஎபியின் வெற்று வாக்குறுதிகளைக் கேட்டு மக்கள் சலித்துப் போய்விட்டனர் என்றார்.
பிகேஆருக்கும் டிஎபிக்கும் இடையிலான பூசல்கள் அவர்களுடைய நலன்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனவே தவிர சரவாக் மக்களின் நலன்களுக்கு அல்ல என்றாரவர்.
மக்கள் இதனை புரிந்துகொள்வார்கள் என்றும், அடுத்த தேர்தலில் டிஎபியை அவர்கள் நிராகரிப்பார்கள் என்றும் மசீச நம்புவதாக லியோ மேலும் கூறினார்.