ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதைத் துணிச்சலான நடவடிக்கை என்று பேங்க் நெகாரா கவர்னர் நினைக்கிறாராம்

bn govபொருள்  சேவை  வரி  அறிமுகமும்  உதவித்  தொகைகள்  சீரமைப்பும்  உலக  அளவில்  பொருளாதாரம்  நிச்சயமற்றிருந்த  நிலையில்  அதைச்  சமாளிக்க  அரசாங்கம்  மேற்கொண்ட  துணிச்சலான  நடவடிக்கை  என  பேங்க்  நெகராவின்  புதிய கவர்னர்  முகம்மட்  இப்ராகிம்  கருதுவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

இதை முகம்மட்டே  தம்மிடம்  தெரிவித்ததாக  பிரதமர்  கூறினார்.

அரசாங்கம்  அந்நடவடிக்கையை  மேற்கொள்ளாதிருந்தால்  கிரீஸின்  நிலைதான்  மலேசியாவுக்கும்  ஏற்பட்டிருக்குமாம்.  இதையும்  மத்திய  வங்கியின்  தலைவரே  தெரிவித்ததாகவும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  குறிப்பிட்டார்.