ஹெலிகாப்டர் ஓட்டுனரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

pilotசரவாக்கில்  ஹெலிகாப்டர் விழுந்து  நொறுங்கிய  இடத்துக்கு  அருகில்  இன்று  காலை  10.45க்கு ஒரு  சடலம் கண்டெடுக்கப்பட்டது.  அது  ஹெலிகாப்டர்  ஓட்டுனரின்  சடலமாக  இருக்கலாம்  என  நம்பப்படுகிறது.

ஆனால்,  அதிகாரிகள்  அது  பிலிப்பினோவான  கேப்டன்  ரெக்ஸ்  ராகாஸின்   சடலம்தான்  என்பதை  உறுதிப்படுத்தத்  தயங்கினார்கள். சவப்  பரிசோதனை  செய்து  அடையாளம்  கண்டறியப்பட்ட  பின்னரே    எதையும்  உறுதியாக  சொல்ல  முடியும்  என்றவர்கள்  கூறிவிட்டனர்.