சரவாக் வெற்றி நஜிப்புக்கு ஆதரவு திரும்பிவிட்டதற்கான அறிகுறி

victoசரவாக்கில் எதிரணி தோற்று  பிஎன்னுக்கு  மகத்தான  வெற்றி  கிடைத்திருந்தாலும்  அது  14வது  பொதுத் தேர்தலில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தலைவிதியை  நிர்ணயிக்க ஒரு  சரியான  அளவுகோல்  அல்ல  என்கிறார்  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங். சுங்கை  புசாரிலும்  கோலா  கங்சாரிலும்  நடைபெறப்போக்கும்  இடைத்  தேர்தலே  சரியான  அளவுகோலாகும்  என்றாரவர்.

சரவாக்  தேர்தல்  பிஎன்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  வெற்றிபெறும்  என்பதைக்  காண்பிப்பதாக  தொடர்புப்  பல்லூடக  அமைச்சர்  சைட்  கெருவாக்  கூறியிருப்பதைப்  புறந்தள்ளிய  கிட் சியாங்,  “சரவாக்கியர்கள்  முதலமைச்சர்  அடினான்  சாதேம்மீது  வைத்துள்ள  நம்பிக்கைதான்”  பிஎன் வெற்றிக்குக்  காரணம்  என்று  நஜிப்  கூறியிருப்பதுதான்  சரி  என்றார்.

“சரவாக்  தேர்தலைவிடவும்  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்களே  14வது  பொதுத்  தேர்தலில்  நஜிப்பின் தலைவிதியைக் காண்பிக்கும்  சரியான  அளவுமானியாக  விளங்கும்  என்பதை  சாலேயும்  அறிவார்”, என  டிஏபி  தலைவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.