நஜிப்: சரவாக் வெற்றி பிஎன்னுக்கு ஆதரவு பெருகிவருவதைக் காண்பிக்கிறது

showஅண்மையில்  நடந்துமுடிந்த  சரவாக்  தேர்தல்  முடிவுகள்   பிஎன்னுக்கும்  பிஎன் தலைமையிலான  அரசாங்கத்துக்கும்  சரவாக்  மக்களின்  ஆதரவு  அதிகரித்து  வருவதைக்  காண்பிப்பதாக  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

இவ்வளவு  பெரிய  அதிகாரத்தை  மக்கள்  கொடுத்திருப்பதால்  பொதுச்  சேவையும்  அதன்  அதிகாரிகளும்  மக்களின் தேவை  உணர்ந்து  செயல்பட  வேண்டியது  அவசியத்திலும்  அவசியமாகும்  என்று  பிரதமர்  குறிப்பிட்டார்.

சரவாக்  வெற்றி  மக்கள்  அங்கு  மேம்பாட்டுப்   பணிகளை  மேற்கொள்ள  வேண்டும்  என  எதிர்பார்ப்பதையும்  காண்பிக்கிறது  என்றாரவர்.

அரசாங்கம்,  அடிநிலை  மக்கள்வரை  திருப்திப்படுத்தும்  வகையில்  பல நல்ல  திட்டங்களை  வைத்திருக்கிறது  என்று  அவர் சொன்னார்.