தோட்டத் தொழில், மூலப் பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோன் மற்றும் வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதால் காலியாகியுள்ள சுங்கை புசார், கோலா கங்சார் தொகுதிகளில் பாஸ் போட்டியிட தயாராகிறது.
அவ்விரு தொகுதிகளிலும் பாஸ் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்திருப்பதாக அதன் தேர்தல் இயக்குனர் முஸ்டபா அலி கூறியதாக ஹராகா டெய்லி அறிவித்துள்ளது.
பகாங்கில் பாஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய முஸ்டபா, சுங்கை புசாரில் பாஸ் 399 வாக்குகளில்தான் தோற்றுப்போனதாகக் கூறினார்.
“கோலா கங்சாரில் பாஸ் ஆயிரம் வாக்குகளில் தோற்றது. ஆக, இடைத் தேர்தல் முடிவு அண்மைய சர்வாக் தேர்தல் முடிவு போல் இராது”, என்றவர் கூறினார்.
பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் பொழுது, ஜ.செ.க. அதன் வேட்பாளரை கோலா கங்சாரில் நிறுத்தி பாஸ் கட்சியின் பலவீனத்தை அக்கட்சிக்கு உணர்த்த வேண்டும். அது போலவே, மக்கள் நீதிக் கட்சி அதன் வேட்பாளரை சுங்கை பெசாரில் நிறுத்தி அக்கட்சியின் பலத்தை பாஸ் கட்சிக்கு நிரூபிக்க வேண்டும். இதுவே பாஸ் கட்சிக்கு பக்காத்தான் ஹரபான் கற்றுக் கொடுக்கும் பாடமாக அமையும். பாஸ் கட்சி மூன்றாம் தர கட்சி என்பதை அக்கட்சிக்கு முதலில் உணர்த்த வேண்டும்.
பாஸ் கட்சி போட்டியிடுவதே நல்லது. அமானா கட்சி இடையில் புகுந்து குழப்பி, அம்னோவுக்கு ஆதரவாக செயல்படப் போகிறது. சரவாக்கில் ‘அப்பனும் மவனும்’ புகுந்து பாரிசான் அமோக வெற்றிப் பெற எப்படி பக்கத்தானுக்குள்ளேயே குட்டையை குழப்பினார்களோ, அதே போன்று, இங்கேயும் நடக்கப் போகிறது. அம்னோவும் பாரிசானும் நமது பொது எதிரி. சென்ற பொதுத்தேர்தலில் வெறும் சொற்ப வாக்குகளிலேயே பாஸ், அம்நோவிடம் தோல்வியுற்றதால், அமானா பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்து செயல்படுவதே நல்லது.
சீனர்கள் பாஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுவதை விட தே. மு. – க்கு ஓட்டுப் போடுவது மேல் என்று எண்ணி ஓட்டுப் போடுவார்கள் அல்லது ஓட்டுப் போடுவதில் இருந்து விலகி நிற்பார்கள். பாஸ் அதன் உண்மை முகத்தைக் காட்டிய பிறகும் சீனரும் இந்தியரும் அக்கட்சிக்கு ஓட்டுப் போடுவதில் ஏதும் நன்மை உண்டா?
மலேசியாவில் எந்த கட்சியை நம்புவது என்றே தெரியவில்லை!குறிப்பாக எதிர்க்கட்சி கூட்டநிகிடையே ஒற்றுமைஇன்மை பி கே ஆர், பாஸ் கூட்டு கலவாநிகிடையே ரகசிய ஒப்பந்தம் மேலும் டி ஏ பி மகாதிர்மாமாக் உடன் நெருக்கம் இது பி என் கூட்டணிக்கு அடுத்த பொது தேர்தலுக்கு மகத்தான வெற்றியை தேடித்தரும் என்பது சிறிதும் ஐயமில்லை!
Map.nathan சொல்வதில் உண்மை இல்லாமலில்லை.
எது எப்படி இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி , சேவை வறி , நிலையற்ற சூழ்நிலை ஆகிவற்றை கருத்தில் கொண்டு வாக்களிப்பது நல்லது.
பாஸ் கட்சி போடியிடுவது அம்னோவுக்கு சாதகமே. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அணைத்து மலேசியர்களும் சேவை வறியை எதிர்கின்றனர்.ஆதலால் அம்னோவுக்கு கடும் போட்டியை எதிர்நோக்க மக்கள் நீதி கட்சி போட்டியிவதே சிறந்தது.