பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி அரசுத் தொடர்புடைய ஒரு நிறுவன(ஜிஎல்சி) விவகாரத்தில் பிரதமர் தலையிடுவதைக் காண்பிக்கும் கடிதத்தின் பிரதி ஒன்று தம்மிடம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்.
அக்கடிதம் பிரதமர்துறை அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட ஜிஎல்சி தலைமைச் செயல் அதிகாரிக்கு எழுதியது என ரபிசி ஓர் அறிக்கையில் கூறினார்.
அக்கடிதம், வீடமைப்பு மேம்பாடு தொடர்பில் அம்னோ தொகுதித் தலைவர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட திவால் அறிவிக்கையைக் கண்டுகொள்ள வேண்டாமென ஜிஎல்சி-யைப் பணிக்கிறது.
“அக்கடிதம் (அம்னோ தொகுதித் தலைவரின்) வங்கிக் கடன் விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துகொள்ளுமாறும் (ஜிஎல்சிக்கு) தெளிவாக உத்தரவிடுகிறது”, என்றாரவர்.
சம்பந்தப்பட்ட அம்னோ தொகுதித் தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வலுவான ஆதரவாளர் என்றும் ரபிசி குறிப்பிட்டார்.
அக்கடிதத்தை ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மையான கடிதம்தான் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் பாண்டான் எம்பியுமான ரபிசி தெரிவித்தார்.
நீ கிளப்பிவிடு தம்பி ராபிசி ! பிரதமரை விட ரோஸ் அக்கா கைவைத்ததை சொன்னால் சிறப்பாக இருக்கும் ,