பிகேஆர் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள சரவாக் தேர்தல் நல்ல பாடமாக அமையும் என எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
“பலவீனங்களை அடையாளம் கண்டு நமது குறைபாடுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வியூகங்களில் திருத்தம் செய்து அடுத்த பெரும் போராட்டத்துக்கு அதாவது 14வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்”, என்று பிகேஆர் தலைவருமான வான் அசிசா கூறினார்.
அடுத்த நீதிப் போராட்டத்துக்கு ஆயத்தமாக கட்சியிலுள்ள குறைகளை நீக்கிச் சரிப்படுத்த வேண்டும். இன்று காலை கோலாலும்பூர் மருத்துவமனையில் உள்ள தம் கணவர் அன்வார் இப்ராகிமைச் சென்று கண்ட பின்னர் வான் அசிசா செய்தியாளர்களிடம் பேசினார்.
அன்வாருக்கு நேற்றிரவு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.