பினாங்கு ஆளுனர் அப்துல் ரஹ்மான் அபாஸ், பினாங்கின் 40 சட்டமன்ற உறுப்பினர்களும் மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பணிவன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இன்று பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ரஹ்மான், “நீங்கள் மக்களின் தலைவர்கள். பொதுமக்களுக்கு நீங்களே முன்மாதிரி”, என்றார்.
அரசியலில் 100 விழுக்காடு ஒத்துப்போதல் என்பது இருக்காது என்பதை அறிந்தே இருப்பதாகவும் எந்தவொரு அரசாங்கத்திலும் சரிபார்த்தல்- சரிசெய்தல் முறை தேவையான ஒன்றுதான் என்றார்.
“அந்த முறையின்மீது நம்பிக்கை வைத்து, தனிப்பட்ட விவகாரங்களையும் அரசியல் கருத்துவேறுபாடுகளையும் ஒதுக்கிவைத்து உங்கள் பணியைத் தொடருங்கள்”, என்று ஆளுனர் தம் உரையில் அறுவுறுத்தினார்.