சுங்கை புசார் மற்றும் கோலா கங்சார் நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகி இருப்பதாகக் கூறும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய(இசி)த்துக்குக் கிடைத்திருக்கிறது.
எனவே, அவ்விரு தொகுதிகளிலும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இடைத் தேர்தல்களை நடத்தியாக வேண்டும்.
தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோனும் வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட்டும் மே 5 ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதை அடுத்து அத்தொகுதிகள் காலியாகின. இருவரும் முறையே சுங்கை புசார், கோலா கங்சார் எம்பிகளாவர்.
இரு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்க வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தப்படும் என இசி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
சிலாங்கூரில் நடைப்பெறும் இந்த இடைத் தேர்தலில் தெரிந்து விடும் மக்கள் கூட்டனியின் பலம் என்னவென்று. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சரவாக் தேர்தலில் களம் இறங்கினார்கள் அதன் விளைவு எதிர்ப் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வரும் இந்த தேர்தலில் அவர்களின் லட்சணம் தெரிந்துவிடும்.