வாக்குகள் வாங்கப்படுவது பற்றிப் புகார் செய்யாதிருப்போர் அரசியல் லஞ்சத்துக்குத் துணை போகின்றவர்கள் ஆவர்

cenமே  7  சரவாக்  தேர்தலில் வாக்குகள் விலைக்கு  வாங்கப்பட்டதற்கான  ஆதாரங்களை  வைத்திருப்போர்  அதிகாரிகளிடம்  புகார்  செய்ய  வேண்டும்.

அப்படிச்  செய்யத்  தவறினால்  அவர்கள்  ஊழலுக்கு  உடந்தை  என்று  கருதப்படுவார்கள்  என  நல்லதோர்  நாளைக்கான  மையம் -Centre for A Better Tomorrow- (சென்பெட்)  கூறியது.

“தவறுகள்  நிகழ்ந்ததற்கு  ஆதாரம்   இருந்தால்  புகார்  செய்ய  வேண்டும். அப்போதுதான்  அதிகாரிகள்  தவறு  செய்தோர்மீது  நடவடிக்கை  எடுக்க  முடியும்.

“அதைச்  செய்யத்  தவறுவோர்  அரசியல்  கையூட்டுகளுக்குத்  துணை  போகின்றவர்களாக,  அந்தத்  தீமை  நம்  சமுதாயத்தில்   ஆழமாக  வேரோட  ஊக்குவிப்பவர்களாகக்  கருதப்படுவார்கள்”, என  சென்பெட்டின்  தலைமைச்  செயலாளர்  கைரில்  அஸ்மி  ஹஸ்பி  கூறினார்.