கேஎல், குற்றச்செயல்களும் பழைமைப்போக்கும் கொண்ட நகரம் என்றும் அதனால் மலேசியச் சுற்றுப்பயணத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதைச் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் மறுக்கிறார்.
சொல்லப்போனால் கோலாலும்பூர் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என மலேசிய சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டாளர் சங்கத் தலைவர் ஹம்சா ரஹ்மாட் கூறினார்.
“கோலாலும்பூர் உலகின் பிரபலமான நகரங்களில் ஒன்றாக, பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாண்டு 12 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இந்நகரத்துக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது”, என்றாரவர்.
உலகளாவிய சுற்றுலா நகரங்கள் மாநாட்டில் பெர்ட் வான் வெல்பெக் என்பார் கேஎல் ஆசியாவின் ஆபத்தான நகரங்களில் ஒன்று எனக் கூறியிருந்தது குறித்து ஹம்சா கருத்துரைத்தார்.