அமானா: இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டியைத் தவிர்ப்பீர்

trapஎதிர்வரும்  இடைத்  தேர்தல்களில்  பக்கத்தான்  ஹராபானும்  பாஸும்  ஒன்றை  மற்றொன்று  எதிர்த்துப்  போட்டியிடும்  நிலை  உருவாக  இடமளிக்கக்கூடாது  என  அமானாவின்  கோலா  திரெங்கானு  எம்பி  ராஜா  கமருல்  பஹ்ரேன்  கூறினார்.

மே  7 சரவாக்  தேர்தல்  அவற்றுக்கு  நல்ல  பாடமாக  அமைய வேண்டும்  என்றாரவர். அத்தேர்தலில் பக்கத்தான்  ஹராபான்  கட்சிகளான  டிஏபியும்  பிகேஆரும்  ஆறு  தொகுதிகளில்  ஒன்றை  மற்றொன்று  எதிர்த்துப்  போட்டியிட  பாஸும் பக்கத்தான்  ஹராபானும்  11  இடங்களில்  மோதிக்  கொண்டன.

மும்முனைப்  போட்டி   என்பது  அம்னோ  விரிக்கும்  வலையாகும். அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  பாஸ்  கோலா கங்சாரில்  போட்டியிடுவதை  ஊக்குவிக்கிறார். அது  அங்கு  போட்டியிட்டால்தானே  பக்கத்தான்  ஹராபானை  எதிர்க்க  முடியும்.  அதனால்தான்  அதை  ஊக்குவிக்கிறார்  என்று  ராஜா  கமருல்  கூறினார்.

“மக்களுக்கு  மாற்றம்  கொண்டுவர  உண்மையிலேயே  விரும்பினால்  எதிரி  விரிக்கும்  வலையில்  என்று  தெரிந்தும்  அதில்  நாம்  விழலாமா?”, என்றவர்  வினவினார்.