இடைத் தேர்தல்களில் பிகேஆர் போட்டியிடுமா?

yesபிகேஆர்  தலைவர்கள்  எதிர்வரும்   சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத்தேர்தல்களில்  பிகேஆர்  போட்டியிடுமா,  மாட்டாதா  என்று   கூறத்  தொடர்ந்து  மறுத்து  வருகிறார்கள்.

நேற்றிரவு  பெட்டாலிங் ஜெயாவில்   கட்சியின்  தலைமையகத்தில்   அரசியல்  விவகாரப் பிரிவின்  கூட்டத்துக்குப்  பின்னர்   செய்தியாளர்கள்  கட்சித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலை  முற்றுகையிட்டு  வினவியதற்கு  ஓர்   அரசியல்  கட்சி  என்றால்  அது  தேர்தலுக்கு  எப்போதும்  தயாராக  இருக்கும்  என்றார்.

“நாங்கள்  தயராக  இருக்கிறோம்.  நாங்கள்  ஓர்  அரசியல்  கட்சி. இடைத்  தேர்தல்களுக்கு  நாங்கள்  எப்பவும்  தயார்”, என  வான்  அசிசா  கூறினார்.