இடைத் தேர்தல்களில் எதிரணியினர் போட்டியிடக் கூடாது: பாஸ் வலியுறுத்து

tuan ibrahimபாஸ்,  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்   இடைத்  தேர்தல்களில்  மற்ற  எதிரணியினர்  கலந்துகொள்ளக்  கூடாது  எனக்  கூறியுள்ளது.

அவ்விரு  தொகுதிகளும்  பாஸ்  தொகுதிகள்  என்றும்  அவற்றுக்காக  அக்கட்சி  அம்னோவையும்  பிஎன்னையும்  எதிர்த்து  முழுமூச்சாக  போராடும்  என்றும்  அதன்  துணைத்  தலைவர் துவான்  இப்ராகிம்  கூறினார்.

பிஎன்  தோற்க  வேண்டும்  என்பது  எதிரணியினரின்  நோக்கம்.. என்றால்  பிஎன்  தோல்விக்காக  எல்லாக்  கட்சிகளும்  சேர்ந்து  பாடுபட  வேண்டும்.

“எதிரணியினர்  அத்தொகுதிகளில்  வேட்பாளர்களை  நிறுத்தினால்  அது  பிஎன்  வெற்றிக்குத்  துணைபோவதாக  அமைந்து  விடும்.

“(எதிரணியினர்)  தங்களில்  யார்  பெரியவர்  என்பதைக் காண்பித்துக்கொள்ள  சுங்கை  புசார்  மற்றும்  கோலா  கங்சார்  இடைத்  தேர்தல்  ஒரு  களமல்ல”, என்றாரவர்.

அவ்விரு தொகுதிகளுக்கான  வேட்பு மனு  தாக்கல்,  வாக்களிப்பு  நாள்கள்  நாளை  அறிவிக்கப்படும்   என  எதிர்பார்க்கப்படுகிறது.