1எம்டிபி-க்காக மக்கள்தான் ரிம48.7 பில்லியனைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை பேங்க் நெகாரா ஆளுனர் மறந்தாரா?’

ramli‘பேங்க்  நெகாரா  ஆளுனர்  முகம்மட்  இப்ராகிம்,  அரசாங்கம்  1எம்டிபி  கடனைச்  செலுத்துவது  என்றால்  மக்கள்தான்  அதைச்  செலுத்த  வேண்டும்  என்பதை  மறந்து  பேசுகிறார்.

“அவர்,  1எம்டிபி-இன்  நிதிச்  சுமைகளுக்குத்  தீர்வுகண்டால்  மட்டுமே  நாட்டின்  பொருளாதாரமும்  நிதிநிலையும்  மீட்சிபெறும்  என்று  மறைமுகமாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  எச்சரித்திருப்பதை  நான்  அறிவேன்.

“1எம்டிபி-இன்  எந்தக்  கடனை  அரசாங்கம்  செலுத்த  முற்பட்டாலும்  அது  மக்களை  மேலும்  துன்புறுத்துவதாகத்தான்  அமையும்  என்பதை  அவர்  மறந்து  விட்டார்போல்  தெரிகிறது”, என  பாண்டான்  எம்பி  ரபிசி  ரம்லி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அரசாங்கம்  1எம்டிபி-க்கு  என்ன  செய்ய  வேண்டுமோ  அதைச் செய்யும்  என்று  நம்புவதாக  முகம்மட்  கூறியிருப்பது  ரபிசி  கருத்துரைத்தார்.

1எம்டிபி-இன்  கடன்கள்  ரிம27.8  பில்லியன். அடுத்த  15  ஆண்டுகளில்  கடனுக்குச்  செலுத்த  வேண்டிய  வட்டி  ரிம20.85 பில்லியன்.  ஆக   மொத்தம்  ரிம48.65 பில்லியன்  கடனை  மக்கள்  செலுத்தியாக  வேண்டும்  என்றாரவர்.