போலீஸ் சிறப்புப் பிரிவு ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயிலை வேவு பார்ப்பதை ஜோகூர் டிஏபி சாடியுள்ளது.
அது ஏற்கத்தக்க செயலல்ல என்றும் அரசாங்கம் அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் மாநில டிஏபி தலைவர் லியு சின் தொங் வலியுறுத்தினார்.
“துங்கு இஸ்மாயில் அவ்வப்போது கூட்டரசு அரசாங்கத்துக்குப் பிடிக்காத கருத்துகளைச் சொல்கிறார் என்பதற்காக அவரை வேவு பார்க்கக்கூடாது.
“சொல்லப்போனால் அரசாங்கம் குடிமக்களை, அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அல்லது கருத்துகளுக்காக வேவுபார்ப்பது சரியல்ல”, என வியு ஓர் அறிக்கையில் கூறினார்.
துங்கு இஸ்மாயில் நேற்று அவரது முகநூல் பக்கத்தில் அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அவரது நடவடிக்கைகள்ளை போலீஸ் சிறப்புப் பிரிவு கண்காணிப்பதாகவும் கூறியிருந்தார்.