அரசாங்கம் இப்போது ஆறு விழுக்காடாக உள்ள பொருள், சேவை வரி விகித்ததை அதிகரிக்க திட்டமிடவில்லை, பரிந்துரைக்கவில்லை, அது குறித்து விவாதிக்கவுமில்லை என நிதி துணை அமைச்சர் சுவா டீ யோங் மறுக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுவா, “ஜிஎஸ்டி விகிதத்தைக் கூட்டுவது பற்றி விவாதிக்கப்படவே இல்லை. எனவே, மக்கள் தவறான செய்திகளை அல்லது தகவல்களைப் பரப்பக்கூடாது”, என்றார்.
சமூக வலைத்தளங்களில் 2016 ஜூன் முதல் நாளிலிருந்து ஜிஎஸ்டி விகிதம் எட்டு விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட விருப்பதாக செய்தி வலம் வருவது குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஜி எஸ் தி வரி அதிகரிக்க அரசாங்கம் எண்ணவில்லையா? முடிந்தால் இன்னும் கூடுதலாக 10% உயர்த்தலாமே மக்கள் இன்னும் சந்தோசம் படுவார்கள்,வாழ்வாதாரம் பிரகாசமா இருக்கும்.அப்ப லகி என்ஜோஇளா
ஜிஎஸ்டி விகித அதிகரிப்பை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த தருணத்தில் இந்த அறிக்கையின் மூலம் மக்களை ஏமாற்றிவிட்டீர்களே !
இயற்கை வளங்கள் இல்லாத வெளிநாடுகள் ஜி.எஸ்.டி யை அமுல் படுத்துகின்றன, நீர்வளம், நிலவளம், இயற்கை வளங்கள், விவசாயம், எரிபொருள், மின்சாரம், கனிம வளங்கள் என எல்லா வளங்களும் நிறைந்த நம் நாடு ஏன் ஜி.எஸ்.டியை அமுல்படுத்த வேண்டியிருக்கிறது ? ஒரு சிலரின் சுயலாபங்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த சுரண்டலை மக்களால் மக்களுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் ஏன் வாய் மூடி ஏற்றுக்கொள்கிறார்கள் ? அதிலும் சில பண்ணாடை “அரசியல்வியாதிகள்” ஏன் கொஞ்சமும் மனசாட்சியின்றி அதை நியாயப்படுத்துகின்றன ? இப்படியான ஏகப்பட்ட “ஏன்”கள் நாட்டின் கடைசி ஏழைக்குடிமகன் வரை மனதில் கொன்டுள்ள கேள்விகள், பதில் ஒன்றுதான் நாட்டில் அனைத்தும் இருக்கிறது, சிலரிடத்தில் “மனசாட்சி”யைத் தவிர !!
ஜி எஸ் டி எத்தனை சதவிகிதம் அதிகரிப்பு செய்தாலும் மக்களாகிய நாங்கள் என்ன செய்ய முடியும்!ஆளும் அரசாங்கத்தின் உறுப்பு கட்சிகள் உள்பட இதற்கு தாங்கள் “ரெடி”என்று சம்மதம் தெரிவிக்க காத்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் மக்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது?