ஜோகூர் பிகேஆர்: தேவை நீர் பங்கீடு அல்ல; நீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு

waterஜோகூர்  பிகேஆர்,  மாநில  அரசு  தண்ணீர்  பங்கீட்டில்  கவனம்  செலுத்துவதை  விடுத்து  நீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில்  ஈடுபட  வேண்டும்  என்று  வலியுறுத்தியது.  மாற்று வழிகளில்  தண்ணீரைப்  பெற  முயல  வேண்டும்,  நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில்  அத்துமீறல்  செய்வோரிடம்  கடுமையாக  நடந்து  கொள்ள  வேண்டும்  என்று  அது  குறிப்பிட்டது.

“பாதிக்கப்படாத  அணைக்கட்டுகளிலிருந்து  நீரை  நான்கு  மாவட்டங்களுக்கும்  கொண்டுவர  உடனடி  நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டும்,  தரையடி  நீரைப் பயன்படுத்திக்கொள்வது  உள்பட  மாற்றுவழிகளில்  நீர்  வரத்துக்கு  ஏற்பாடுகளைச்  செய்ய  வேண்டும்  என்று  ஜோகூர்  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொள்கிறேன்”, என  ஜோகூர்  பிகேஆர்  துணைத்  தலைவர்  ஜிம்மி  புவா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.