மகாதீர்: “மக்கள் பிரகடனத்தில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்

 

DRMmorethanonemillionsignatures“மக்கள் பிரகடனம்” ஒரு மில்லியனுக்கும் கூடுதலான கையொப்பங்களைப் பெற்றுள்ளது என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

மக்கள் பிரகடனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்போது 2 மாதங்கள் ஆகின்றன. இரண்டு மாதங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன என்று புத்ராஜெயாவில் இன்று பின்னேரத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறினார்.

மொத்தம் 1.27 மில்லியன் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. அவற்றில் 1.07 மில்லியன் கையொப்பங்கள் ஓன்லைன் வழியாகவும் எஞ்சிய 200,000 பாரங்கள் வழையாகவும் பெறப்பட்டன.

இப்பிரகடனம் பிரதமர் பதவியிலிருந்து நஜிப் ரசாக்கை அகற்றக் கோருகிறது.